உ.பி.யில் பத்திரிகையாளர் கைதுக்கு ராகுல் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      இந்தியா
Rahul Gandhi 2019 05 02

புது டெல்லி : உ.பி.யில் பத்திரிகையாளரை கைது செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல் முட்டாள்தனமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்டார். அவரை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக கூறி அவரது மனைவி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்ததை நீதிபதிகள் கண்டித்தனர். அவரை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உ.பி.யில் பத்திரிகையாளரை கைது செய்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் செயல் முட்டாள்தனமானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, உத்தரப்பிரதேசத்தில் தன்னை விமர்சித்த பத்திரிகையாளர் கனோஜியை கைது செய்து சிறையில் அடைத்த முதல்வர்  யோகியின் செயல் முட்டாள்தனமானது. கைது செய்த பத்திரிகையாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து