பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு மேலும் கால அவகாசம் - தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      தமிழகம்
engineering certificate verify 2019 06 11

சென்னை : பி.இ., பி.டெக் பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சேவை மையங்கள்...

தொழில் நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும் பி.இ., பி.டெக் பொறியியல் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி கடந்த 7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள 46 பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. சென்னை தரமணி மைய பலவகை தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு வீரர்களுக்கான ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு மையத்தையும் மற்றும் பொதுப் பிரிவு மாணாக்கர்களுக்கான இரு சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களையும், உயர்கல்வித்துறை அமைச்சர், அரசு உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மேலும் ஒருநாள்...

ஒரு சில மையங்களில் கூடுதலாக ஒரு நாள் அவகாசம் தேவை என்ற மாணவர்களது கோரிக்கையை ஏற்று, மேலும் ஒருநாள் அதாவது நாளை ஒருநாள் வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகத்தில் உள்ள 46 சேவை மையங்களிலும் நடத்தப்படும் எனவும், அதனை அனைத்து மாணவர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

கட்டணம் குறைவு...

பொறியியல் மாணாக்கர்கள் சேர்க்கையின் போது, அரசு ஒதுக்கீட்டின்கீழ் ஒற்றைச் சாளர முறையில் சேரும் போது கல்விக் கட்டணம் மிக குறைவாகும். மேலும், அரசு / அரசு நிதி உதவிபெறும் / சுய நிதி பொறியியல் கல்லூரிகளில், முதல் தலைமுறை பட்டதாரி சான்று பெற்றவர்கள் அரசு வழங்கும் உதவி தொகையைப் பெறலாம்.

தொலைபேசி எண்...

பொறியியல் கல்லூரி சேர்க்கை சம்மந்தமாக மாணாக்கர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை தொலைபேசி எண்கள் 044- 2235 1014, 044- 2235 1015 வாயிலாக உரிய விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 6712 மாணாக்கர்கள் தொலைபேசி மூலமாகவும், 2114 நபர்கள் நேரிடையாகவும் மற்றும் 23,724 நபர்கள் மின்னஞ்சல் மூலமாகவும் ஆக மொத்தம் 32550 மாணவர்கள் தங்களது சந்தேககங்களுக்கு உரிய விளக்கம் பெற்று பலன் அடைந்துள்ளார்கள்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து