முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்று மாசுவை தடுக்க மாணவர்கள் முன்வர வேண்டும்” சிவகங்கையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தில் நீதிபதி த.பா. வடிவேலு பேச்சு.

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை -சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் சார்பில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மற்றும்  சுவாமி விவேகானந்தா  உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும்அதைச் சார்ந்த  சட்ட விழிப்புணர்வு முகாம்; நடைபெற்றது.  
முகாமில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலாளர்ஃசார்பு நீதிபதி திரு. த.பா. வடிவேலு கலந்து கொண்டு பேசும் போது , 2019ம் வருட “உலக சுற்றுச்சூழல் தினம் (ஜீன் 5 )” என்பது “காற்று மாசுவை தடுப்போம்” என்ற முழக்கத்துடன் கடைப்பிடிக்கப்படும் என்றும், சீனா இதை முன்னெடுக்கும் நாடு என்றும் - ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி - 2018ல் “பிளாஸ்டிக்கை ஒழிப்போம்”; என்ற முழக்கத்துடன் இந்தியா முன்னெடுக்கும் நாடாக செயல்பட்டதென்றும், ஆனால் போதிய ஒத்துழைப்பும் மற்றும ; ஒருங்கிணைப்பும் அனைத்து தரப்பிலிருந்து கிடைக்கவில்லை என்பதால் பிளாஸ்டிக் ஒழிப்பை நம்மால் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவேற்ற இயலவில்லை என்றும்  குறிப்பிட்டார்.  ஒவ்வொரு வருடமும் காற்று மாசுவால் இந்தியாவில் 12 லட்சம் பேர் இறப்பதாகவும,; இன்னும் 5 வருடங்களில் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும் என புள்ளி விவரம் தெரிவிப்பதாகவும், எனவே காற்று மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் - மரம் நடுதல், குறைவான எரிசக்தி பயன்பாடு, மாற்று எரிசக்தி பயன்பாடு, வாகன எரிபொருள் சிக்கனம், பொது போக்குவரத்து பயன்பாடு ஆகியவற்றை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.
இதில் கலந்து கொண்ட சிவகங்கை உதவி வன பாதுகாப்பு அலுவலர் மணிவண்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பின் முக்கியததுவம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்களின் முக்கிய  பங்கு குறித்தும் பேசினார்கள். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. என். சுந்தரராஜன் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்ட பணிகள் தன்னார்வலர் நாகேந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர்கள்   ஆசிரியைகள் உதவியுடன் சிறப்பாக செய்திருந்தார்;.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து