முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார். காயம் காரணமாக 3 வாரங்கள் ஓய்வெடுக்க தவானுக்கு  மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. ஷிகர் தவானுக்கு பதில் ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர்களில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த 2-வது இந்தியர் ஷிகர் தவான் ஆவார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து