கல்லீஸின் ஆல் டைம் லெவன் அணியில் சச்சின் - டோனி - விராட் கோலிக்கு இடம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      விளையாட்டு
Jacques Kallis Squad - 3 Indians 2019 06 11

கேப்டவன் : கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்த கல்லீஸ், தனது ஆல் டைம் லெவன் அணியில் மூன்று இந்திய வீரர்களுக்கு இடம் வழங்கியுள்ளார்.

ஒருநாள் போட்டி...

தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் கல்லீஸ். இவர் தனது ஆல் டைம் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ஒருநாள் போட்டிக்கான அந்த அணியில் மூன்று இந்திய வீரர்களை சேர்த்துள்ளார்.

பிளின்டாப்பிற்கு...

தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் சச்சின் தெண்டுல்கருக்கும், 4-வது வீரராக விராட் கோலிக்கும், விக்கெட் கீப்பர் இடத்தை டோனிக்கும் வழங்கியுள்ளார். சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பிடிக்கவில்லை. அதேபோல் ஆல்-ரவுண்டர் வரிசையில் அவருக்கே இடம் கொடுக்கவில்லை. மேலும், கபில்தேவ், இம்ரான் கான், இயன் போத்தம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்காமல் பிளின்டாப்பிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

வீரர்கள் விவரம்:-

1. சச்சின் தெண்டுல்கர், 2. பிரையன் லாரா, 3. ரிக்கி பாண்டிங், 4. விராட் கோலி, 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. பிளின்டாப், 7. எம்எஸ் டோனி, 8. ஷேன் வார்னே, 9. ஷான் பொல்லாக், 10. வாசிம் அக்ரம், 11. வக்கார் யூனிஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து