அரை இறுதிக்கு தகுதி பெறுமா இந்திய அணி? கேப்டன் கோலி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      விளையாட்டு
virat kohli interview 2019 06 11

லண்டன் : உலகக்கோப்பை அரை இறுதியில் இந்திய அணிக்கு இடமுண்டா என்பதை தற்போதே கணித்து விட முடியாது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் 6 போட்டிகளுக்குப் பிறகே, அரை இறுதிக்கான வாய்ப்பு குறித்து பேச முடியும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் தங்கள் அணி வலிமையுடன் இருப்பது சிறப்பான விஷயம் என்று அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள கோலி, சொந்த மண்ணில் அந்த அணி தங்களை வீழ்த்தியதற்கு பழிதீர்த்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து