முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு அதிக நெருக்கடி - நியூசி. பந்து வீச்சாளர் பெர்குசன் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : எங்களை வீழ்த்த வேண்டும் என இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும் என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

தொடர் வெற்றி...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மட்டுமே தோல்விகளை சந்திக்காத அணிகளாக உள்ளது. நியூசிலாந்து அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. அதேபோல் இந்திய அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம் நாளை நாட்டிங்காமில் நடக்கிறது. இதில் வெற்றி பெற இரு அணிகளும் ஆர்வமாக இருக்கும் என்பதால் போட்டி சுவராஸ்யமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் மழை குறுக்கிடாமல் இருந்தால் ரசிகர்கள் ஜோராக ரசிக்கலாம்.

அதிக நெருக்கடி...

உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியிருந்தது. இதற்கு பழீ தீர்க்கும் வகையில் இந்தியா விளையாடும். இந்நிலையில் எங்களை வீழ்த்த வேண்டும் என இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர பெர்குசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெர்குசன் கூறுகையில் ‘‘இந்திய அணி வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த இந்திய அணியில் ஏராளமான தரமான வீரர்களும், சில எதிர்பார்ப்புக்குரிய தனித்துவமான வீரர்களும் உள்ளனர். தொடர் வகையிலான கிரிக்கெட் (Tournament cricket) மிகவும் சுவாரஸ்மானதில் ஒன்று.

கணக்கிடக்கூடாது...

எங்களை வீழ்த்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அதிகப்படியான நெருக்கடி இருக்கும். எல்லாத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த விரும்பும். பயிற்சி ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அதை வைத்து தொடரை கணக்கிடக்கூடாது. ஆனால், பயிற்சி ஆட்டத்தில் பெற்ற வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம். எங்களுடைய தொடக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து ஸ்விங் செய்து விக்கெட்டுக்களை வீழ்த்தினால், மிடில் ஓவர்களில் என்னுடைய வேலை எளிதாக இருக்கும்.

எளிதானது இல்லை...

குறைந்த தூரம் கொண்ட பவுண்டரி லைன் மைதானத்தில் பந்து வீசுவது எளிதான காரியம் இல்லை. இருந்தாலும், போட்டி ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்காக இருக்கும். நாட்டிங்காமில் இதற்கு முன் நடைபெற்ற இரண்டு பேட்டிகளிலும் அதிக அளவில் பவுன்ஸ் மற்றும் வேகம் இருந்தது. இது எனக்கு எப்போதுமே உதவியாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் இங்குள்ள ஆடுகளத்தில் சிறப்பாக பந்து வீசினார்கள்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து