தாஜ்மகாலுக்குள் 3 மணி நேரத்திற்கு மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் - தொல்லியல் துறை அறிவிப்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2019      இந்தியா
Taj Mahal 2019 06 12

ஆக்ரா : தாஜ் மகாலுக்குள் 3 மணி நேரத்துக்கு மேல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான தாஜ்மகாலில் சமீபத்தில் டெர்ன்ஸ்டைல் கேட்டுகள் பொருத்தப்பட்டன. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை நேரமும், வெளியே செல்லும் நேரமும் பதிவாகும். இந்நிலையில், தாஜ் மகாலுக்குள் 3 மணி நேரத்துக்கு மேல் சுற்றுலா பயணிகள் இருந்தால், டிக்கெட் விலையே அபராதமாக விதிக்கப்படும் என்று இந்திய தொல்லியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. மேலும் நுழைவு சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நுழைவு நேரத்துக்கு பதிலாக சுற்றுலா பயணிகள் தாமதமாக வந்தால் அனுமதி மறுக்கப்படும் என்றும், புதிய நுழைவு சீட்டு வாங்கிய பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து