ஒற்றை தலைமை கோரிக்கை இனி அ.தி.மு.க.வில் எழாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

புதன்கிழமை, 12 ஜூன் 2019      தமிழகம்
Minister-Jayakumar 2019 05 18

சென்னை : ஒற்றை தலைமை கோரிக்கை இனி அ.தி.மு.க.வில் எழாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தேர்தலுக்கு பின்னால் நடக்கக் கூடிய வழக்கமான கூட்டம் தான். ஒரு பிரச்சினையும் இல்லை. தற்போது நடைபெற்றது வழக்கமான ஆலோசனை கூட்டம் தான். கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதகமும் இல்லை. ஒற்றைத்தலைமை தேவை என்ற கோரிக்கை இனி அ.தி.மு.க.வில் எழாது. உள்ளாட்சித்தேர்தல், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஒற்றை தலைமை என்பது ஒரு பிரச்சினையே இல்லை, அதுகுறித்து கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து