பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில் - சட்ட முன்வடிவுக்கு பீகார் அரசு ஒப்புதல்

புதன்கிழமை, 12 ஜூன் 2019      இந்தியா
bihar govt law approve 2019 06 12

பாட்னா : நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவையில் புதிய சட்ட முன் வடிவு ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அதில் வயதான பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு சிறைத்தண்டனை கிடைக்கும் வகையிலான சட்ட முன்வரைவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்

கைவிடப்படும் பெற்றோரின் மகளோ, மகனோ யாராக இருந்தாலும் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு தண்டனை பெறுவதற்கான சட்ட முன்வரைவிற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தன்னலமின்றி பெற்றோர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் சுயநலத்தால் பெற்ற தாயையும், தந்தையை கைவிடும் அவலம் நீடித்துக் கொண்டே செல்கிறது. பெற்ற பிள்ளைகளின் நலனுக்காக அநேக தியாகங்களை செய்த பெற்றோர்களை மறந்து திருமணமான பிறகு பிள்ளைகளால் அநாதையாக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டே இந்த சட்டமுன்வரைவிற்கு பீகார் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நடவடிக்கை

தன்னுடைய சொந்த பிள்ளைகளால் கைவிடப்படும் மற்றும் பாதிக்கப்படும் பெற்றோர்கள் முன் வந்து புகார் அளித்தால், அவர்களின் பிள்ளைகள் மீது உடனடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அம் மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் வயதான பெற்றோர்களை அவர்களின் பிள்ளைகள் ஒழுங்காக கவனிக்க வழிவகை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து