அமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதிய வட கொரியா அதிபர் கிம் !

புதன்கிழமை, 12 ஜூன் 2019      உலகம்
trump-kim Kim Jong 2019 03 24

வாஷிங்டன் : அமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அழகிய அன்பான கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக அழகிய கடிதம்...

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஐயோவா செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப் கூறுகையில், ‘எனக்கு கிம் ஒரு அழகான கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் இதமான வார்த்தைகளால் அன்பான முறையில் எழுதினார். இந்த கடிதம் எனக்கு கிடைத்த மிக அழகிய கடிதம்’ என மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார். இருப்பினும் கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது  என்பதை கூறவில்லை.

அதிபர் டிரம்ப் முடிவு...

இதனையடுத்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டஸ் கூறியதாவது:

வளம் மிக்க வடகொரியாவுடனும், கிம்முடனும் அதிபர் டிரம்ப், எப்போதும் நல்ல உறவை உண்டாக்கவே வலியுறுத்தி வருகிறார். கொரிய தீபகற்ப அணுகுமுறை பற்றி விவாதிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இதற்காக இம்மாத கடைசியில் ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல டிரம்ப் மற்றும் அவரது செயலாளர் மைக் பாம்பியோ திட்டமிட்டுள்ளனர்.

பேச்சு வார்த்தையை...

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பொருளாதாரத்தடை நீக்கப்படாமல் இருந்த போதும், வட கொரியாவுடன் வெளிப்படையான பேச்சு வார்த்தையை வாஷிங்டன் உறுதியாக மேற்கொள்ளும்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து