கனடாவில் டால்பீன்கள், திமிங்கலம் வளர்க்க தடை - புதிய சட்டம் அமலானது

புதன்கிழமை, 12 ஜூன் 2019      உலகம்
whale-dolphin ban canada 2019 06 12

ஒட்டாவா : கனடாவில் திமிங்கலம், டால்பீன் ஆகியவற்றை வளர்க்க தடை விதித்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

சட்டம் தாக்கல்...

இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக  ‘ப்ரி வில்லி’ என்ற புதிய சட்டம்  குறித்த மனு கனடா நாட்டு நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.  இந்த சட்டத்தின்படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாரும் திமிங்கலங்கள் மற்றும் டால்பீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த சட்டம் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி அபராதம்...

மேலும் இவற்றை வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்ய பயன்படுத்துவதற்கும் முற்றிலும் தடை விதிக்க இந்த சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.  இந்த புதிய சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை மீறுபவர்கள் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

போராட்டம்...

இதற்கிடையில் விலங்குகள், உயிரினங்களுக்கான பீட்டா அமைப்பு இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டி போராட்டம் நடத்தி இருந்தது. இதன் விளைவாக இறுதியாக இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து