நேபாளத்தில் விபத்து - 2 இந்தியர்கள் பலி

புதன்கிழமை, 12 ஜூன் 2019      இந்தியா
nepal accident 2019 06 12

காத்மாண்டு : நேபாளத்தில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.

லாரி மோதல்...

நேபாள நாட்டுக்கு இந்தியாவில் இருந்து 60 பேர் சுற்றுலா சென்றனர். அவர்கள் காத்மாண்டுவில் இருந்து ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். ரவுத்தாட் மாவட்டம் பவுராய் வனப்பகுதியில் பஸ் சென்ற போது ஓய்வுக்காக சிறிது நேரம் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த லாரி, பஸ் மீது மோதியது. இதனால் பஸ் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டது.

3 பேர் கவலைகிடம்...

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய்குமார் ஜெனா (வயது 52), சரண் பி‌ஷால் (54) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து