முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க ‘ஸ்மார்ட் கார்டு’ - முதல்வர் எடப்பாடி நாளை வழங்குகிறார்

புதன்கிழமை, 12 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

கட்டமைப்பு வசதிகள்....

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாடப்புத்தகம் முதல் சைக்கிள், மடிக்கணினி வரை இலசமாக வழங்கப்படுகிறது. மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் அனைத்து வசதிகளையும் பெற அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு தரம் உயர்த்தப்படுகின்றன.

புதிய பாடத் திட்டங்கள்

இந்த வருடம் 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியும் அவர்களின் விருப்பத்தின்படி இந்த அடையாள அட்டையினை வடிவமைத்து வழங்குகின்றன. இதற்காக மாணவர்களிடம் இருந்து சிறிய தொகையும் பெறப்படுகிறது.

முதல்வர் வழங்குகிறார்...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இந்த அடையாள அட்டையில் மாணவர்கள் பற்றிய முழு விவரங்கள் இடம்பெறுகின்றன. மாற்று சான்றிதழில் உள்ள முக்கிய தகவல்கள் ஸ்மார்ட் கார்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு பள்ளிக்கல்வி துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் கார்டில் பல்வேறு சிறப்புகள் அமைந்துள்ளன.

பல தகவல்கள்...

மாணவரின் பெயர், தந்தை பெயர், யூனிக் அடையாள அட்டை எண், பள்ளியின் பெயர், மாணவரின் முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை இடம் பெறுகிறது. இது தவிர ‘‘கியூ-ஆர் கோடு’’ என்று சொல்லக்கூடிய நவீன தொழில் நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. கியூ-ஆர் கோடினை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் கார்டு திட்டம்

இதன் மூலம் வெப்சைட்டிலும் எளிதாக மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த அடையாள அட்டை தவறினால் கூட மாணவர் பற்றிய தகவல்களை பெற முடியும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்ட அதிகாரிகளின் தீவிர முயற்சியால் ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து