முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமையே தொடரும் - துணை ஒருங்கிணைப்பாளர் திட்டவட்டம்

புதன்கிழமை, 12 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை பற்றி விவாதிக்கப்படவில்லை என்றும், இரட்டைத் தலைமையே தொடரும் என்றும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

உற்சாக வரவேற்பு...

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர். அவர்களை அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டு வரவேற்றனர். காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்தும் உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக பணியாற்றுவது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இரட்டை தலைமை...

இந்த கூட்டத்திற்கு பின்னர் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர். வைத்திலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கட்சி வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசினோம். நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி ஏற்பட்டதற்கான காரணம், நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு ஒற்றுமையாக உழைக்க வேண்டும். எந்த கருத்து வேறுபாடு இல்லாமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அ.தி.மு.க.வில் இரட்டைத் தலைமையே தொடரும். பொதுச்செயலாளர் தேர்தல் என்ற பேச்சுக்கே இப்போது இடமில்லை என்றார்.

பிரச்னை இல்லை...

மீன்வளத்துறை மற்றும் பணியாளர் நிர்வாகத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

கட்சியில் நடைபெறும் ஒரு வழக்கமான கூட்டம் இது. இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்துதான் பேசப்பட்டது. அ.தி.மு.க.வில் எந்த பிரச்னையும் இல்லை. தேர்தல் குறித்து விவாதித்தோம். உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதித்தோம். எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளோம். எந்த பிரச்னையும் இல்லை. ஒற்றைத் தலைமை குறித்து எதுவும் பேசவில்லை. கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த ஆபத்தும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிரித்துக் கொண்டே...

பால்வளத் துறை அமைச்சர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம். சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம். எந்த பிரச்னையும் இல்லை. கடந்த தேர்தல் முடிவுகள் குறித்து வரும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்தும் பேசினோம். எதுவாக இருந்தாலும் முதல்வரும், துணை முதல்வரும் முடிவு எடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து