இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து வியூகம் - பந்துவீச்சாளர் பெர்குசன் தகவல்

புதன்கிழமை, 12 ஜூன் 2019      விளையாட்டு
NZ Bowler Perkusan 2019 06 12

லண்டன் : இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியின் வியூகம் குறித்து அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஃபெர்குசன் தெரிவித்துள்ளார்.

3-வது ஆட்டம்...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வென்றுள்ளது. அதே போல இந்திய அணியும் இந்தத் தொடரில் விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இதனால் இந்தப் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பக்கம்...

இந்நிலையில் நாளையை போட்டிக்கு நியூசிலாந்து அணியின் வியூகம் பற்றி பந்துவீச்சாளர்  ஃபெர்குசன் தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நடப்பு உலகக் கோப்பை தொடரில் நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இன்றைய போட்டியில் அதை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அத்துடன் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அது ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பும்.

பெரிய இழப்பு...

இந்திய அணியில் தவான் இல்லாதது பெரிய இழப்பு தான். ஆனாலும் அவரின் இடத்தை நிரப்ப இந்தியாவில் சிறந்த வீரர்கள் உள்ளனர். போட்டி நடக்கும் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, பவுன்சர் பந்துகளை சரியாக உபயோகப் படுத்தியது. நாங்களும் பவுன்சர்களை உபயோகிக்க திட்டமிட்டுள்ளோம். நடப்பு தொடரில் எங்களது அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. விளையாடிய மூன்று போட்டியில் 30விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில், இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து