பிரதமர் மோடிக்கு சச்சின் பாராட்டு

புதன்கிழமை, 12 ஜூன் 2019      விளையாட்டு
sachin congratulate pm modi 2019 06 12

மீண்டும் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றார்.  அப்போது இந்திய அணியின் வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டினை அந்நாட்டு அதிபருக்கு பரிசாக அளித்துள்ளார்.   இந்த புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டு, ‘எனது நண்பர், இபுசோலிக் ஒரு சிறந்த கிரிக்கெட் ரசிகர். எனவே, அவருக்கு இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்ட பேட்டினை பரிசாக அளித்துள்ளேன்’ என கூறியிருந்தார். 

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளராக மாறி இருக்கும் சச்சின் டெண்டுல்கர் தனது கருத்தினை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது: கிரிக்கெட்டினை புரொமோட் செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலக கோப்பை நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் கிரிக்கெட்டின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக் காட்டாக இந்த செயல் உள்ளது. கிரிக்கெட் வரைப்படத்தில் மாலத்தீவுகள் விரைவில் வரும் என நம்புகிறேன்.  இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து