முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலக்கோட்டையூரில் காவலர் பொதுப்பள்ளிக்கு அடிக்கல் ரூ.11 கோடியில் கோவைப்புதூரில் காவல் துறையினருக்காக 137 காவலர் குடியிருப்புகள் - முதல்வர் எடப்பாடி திறந்துவைத்தார்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ஆம் அணிக்காக 10 கோடியே 88 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 137 காவலர் குடியிருப்புகளை முதல்வர் . எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

காவலர்களுக்கு புதிய குடியிருப்புகள்

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை காவல்துறை ஆற்றி வருகின்றது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறையின் பணிகள் மேலும் சிறக்க, புதிய காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரோந்து பணிகளை மேற்கொள்ள புதிய வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம், கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ஆம் அணிக்காக 10 கோடியே 88 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 137 காவலர் குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

36 கோடியில் புதிய கட்டிடங்கள்

பெரம்பலூர் - துரைமங்கலத்தில் 76 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் - மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9 -ஆம் அணிக்காக 48 காவலர் குடியிருப்புகள், என 15 கோடியே 21 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 124 காவலர் குடியிருப்புகள், சென்னை மாநகரம் - சிட்லபாக்கம் மற்றும் திருமங்கலம், ராமநாதபுரம் மாவட்டம் - உத்திரகோசமங்கை, தஞ்சாவூர் மாவட்டம் - பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் 4 கோடியே 32 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 காவல் நிலையங்கள்,காஞ்சிபுரத்தில் 63 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத்துறை பிரிவு அலுவலகக் கட்டடம், சேலம் மாநகரம் - அன்னதானபட்டியில் 2 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆயுதப்படைக்கான நிருவாகக் கட்டடம், வேலூர் மாவட்டம் - அரக்கோணத்தில் 54 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணைக்காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம், சிவகங்கை மாவட்டம் - தேவகோட்டையில் 1 கோடியே 44 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 13 குடியிருப்புகள் என மொத்தம், 36 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

காவலர் பொதுப்பள்ளிக்கு அடிக்கல்

மேலும், சிறை அங்காடிகளின் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் சிறைத்துறை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்துபுழல் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று திறந்து வைத்தார் காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர் """"உங்கள் சொந்த இல்லம்"" திட்டப் பயனாளிகள் மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் காவல்துறை பணியாளர்களின் நலன் கருதி, காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 51 கோடியே 14 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவில் """"காவலர் பொதுப் பள்ளி"" நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள காவலர் பொதுப் பள்ளிக் கட்டடத்திற்கு முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.அதைத் தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல்துறை கையாண்ட வழக்குகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் குறித்த செய்திகளை தொகுத்து புதிதாக தயாரிக்கப்பட்ட "ஆண்டு மலர் 2018"" என்ற புத்தகத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் . டி.கே. ராஜேந்திரன், ஆகியோர் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் காந்திராஜன், காவல்துறை கூடுதல் இயக்குநர்/ சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன், காவல்துறை கூடுதல் இயக்குநர் / சிறைத்துறை தலைவர் .அபாஷ் குமார், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மஞ்சுநாதா,இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் முதன்மைப் பொது மேலாளர் (பொறுப்பு). அண்ணாதுரை, இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் (சென்னை மண்டலம்). அபிஷேக் சர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து