முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. உடன் கூட்டணி - தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா அறிவிப்பு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போதுஅவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுடன்...

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார்,தினமும்கட்சி அலுவலகத்திற்கு வருகிறார், அடுத்த தேர்தலில் அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்வார்.வரும் உள்ளாட்சித்தேர்தல் முதல் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும், தேர்தல் வந்ததும் யார் யாருக்கு எந்த பகுதிகள் என்று முடிவு செய்து அறிவிப்போம்.ஒற்றைத்தலைமை என்பது அ.தி.மு.க.வின் உள்கட்சி பிரச்னை. இதில் நாங்கள் எதுவும் கருத்துசொல்லமுடியாது.

கோரிக்கை வைப்போம்...

தண்ணீர் பிரச்னை இந்தியா முழுவதும் இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது துரதீர்ஷ்டவசமான ஒன்று, தண்ணீர் பிரச்னையிலும் தமிழகம் தன்னிறைவு பெறவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அதற்காக எதிர்வரும் மழைக்காலத்தில் மழைநீரை சேமிக்க வேண்டும். நதிநீர் இணைப்பு குறித்து முதல்வருடனும் பிரதமரிடமும் கோரிக்கை எழுப்புவோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து