முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இம்ரான்கானை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்த பிரதமர் நரேந்திர மோடி

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் போது இம்ரான்கானுடன் பிரதமர் மோடி பரஸ்பரம் நலம் விசாரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களுக்கு கிர்கிஸ்தான் அதிபர் விருந்து வைத்தார். இந்த விருந்தின்போது, தலைவர்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இம்ரான் கானிடம் பிரதமர் மோடி பரஸ்பரம் நலம் விசாரிக்கவில்லை என ஏ.என்.ஐ செய்தி நிறுவன தகவல்கள் கூறுகின்றன.

முன்னதாக, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் கைகுலுக்குவதை தவிர்த்தார். மாநாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்திக்காமல் பிரதமர் மோடி தவிர்த்தார். பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து மூன்று இருக்கை தள்ளி இம்ரான் கான் அமர்ந்திருந்த போதும் அவரை சந்தித்து கை குலுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து