முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் வழக்கத்தை விட மழை பொழிவு குறைவு -ஆய்வில் தகவல்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

கேரளாவில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் இடுக்கி மாவட்ட பகுதிகளில் மழை பொழிவு குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதையடுத்து, அம்மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழக உள்மாவட்டங்களிலும், சென்னையிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், இடுக்கி மாவட்டம் மூணாறில் ஜுன் மாதம் முதல் வாரத்தில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆலப்புழா, கோட்டயம், திருவனந்தபுரம் மாவட்டங்களிலும் வழக்கத்தை விட மழை அளவு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மழை காலம் தொடங்கியுள்ளதால், இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து