முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே அதிகாரிகளுக்கான சுற்றறிக்கையில் மாற்றம்- புரியும் மொழியில் பேசலாம் என அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்ற விஷயத்தில் தங்களுக்கு புரியும் மொழியில் பேசலாம் என தெற்கு ரயில்வே சுற்றறிக்கையில் மாற்றம் செய்து உள்ளது.

தகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம் என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

இதற்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற்றது. ரயில்வே உத்தரவை உடனடியாக திரும்பப்பெற கோரி, தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, சேகர்பாபு உள்ளிட்டோர் தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் மனு அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல்களில் பழைய நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவித்தார். தெற்கு ரயில்வேயில் அலுவல் சார்ந்த உரையாடல் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் பழைய நடைமுறையே தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து