முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.1,230 கோடி மோசடி வழக்கில் நகைக்கடை அலுவலகத்துக்கு ‘சீல்’

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

ரூ.1,230 கோடி மோசடி வழக்கில், புகார்களின் எண்ணிக்கை இதுவரை 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய மன்சூர் கானின் நகைக்கடை மற்றும் தலைமை அலுவலகத்துக்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர்.

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வருபவர் மன்சூர்கான். தனது நகைக்கடையில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறினார். இதை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய நகைக்கடையில் பணம் முதலீடு செய்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்சூர்கான் திடீரென்று தலைமறைவானார். அதைத்தொடர்ந்து, சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க் தன்னிடம் வாங்கிய ரூ.400 கோடியை திரும்ப தர மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் தற்கொலை செய்ய உள்ளதாக மன்சூர்கான் பேசும் ஆடியோ வெளியானது.

இந்த நிலையில், மன்சூர்கானிடம் முதலீடு செய்த ஏராளமான பொதுமக்கள் கடந்த 10-ந் தேதி சிவாஜிநகரில் உள்ள அவருடைய நகைக்கடை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அவர்களிடம் இருந்து புகார்கள் பெற தொடங்கினர். மேலும் கமர்சியல் தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.இதற்கிடையே, வழக்கு விசாரணை சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் டி.ஐ.ஜி. ரவிகாந்தே கவுடா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் மோசடி தொடர்பாக நகைக்கடையின் இயக்குனர் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இது ஒருபுறம் இருக்க  4-வது நாளாக மோசடியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் புகார்கள் வாங்கப்பட்டன. புகார்களை கொடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்றைய நிலவரப்படி மன்சூர்கான் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது.இந்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவினர் சிவாஜிநகரில் உள்ள மன்சூர்கானின் நகைக்கடை மற்றும் தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கு பூட்டுப்போட்டு ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து