முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொழிப்பிரச்னையை கையில் எடுத்துள்ள மம்தா

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சியை எதிர்கொள்ளத் தடுமாறும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மொழிப் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 எம்.பி.தொகுதிகளை பா.ஜ.க.வென்றது. அந்த வெற்றிக்கு பின்னர் திரிணாமுல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் எம்.எல்.ஏ., எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஐக்கியமாகி வருகின்றனர்.தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடியும் திரிணாமுல் எம்.எல்.ஏ.,க்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக அதிரடியாக அறிவித்தார். தேர்தல் பிரசாரத்திலும், தேர்தலுக்கு பின்னரும் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து பா.ஜ.க. திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க கவர்னர் திரிபாதியை அழைத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விவாதித்துள்ளார். கவர்னரும் வங்கத்தின் அனைத்துகட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். மறுபுறத்தில், கடந்த 5 நாட்களாக, டாக்டர்கள் போராட்டமும் வலுவடைந்துள்ளது.இதனால், அரசியல் சிக்கலை எதிர்கொண்டுள்ள மம்தா, டிவிட்டரில் மொழிப் பிரச்னையை கிளப்பும் பதிவொன்றை போட்டுள்ளார். அதில் நாங்கள் முன்னேறிய வங்கத்தை படைப்போம். நான் பீகார், உ.பி.,பஞ்சாப் மாநிலங்களுக்கு போனால், அம்மக்களின் மொழியில் பேசுவேன். ஆனால், உங்களால் மேற்கு வங்க தாய்மொழியான பெங்காலி மொழியில், பேசமுடியுமா?.நான் வங்கத்தில் தங்கியுள்ள கிரிமினல்களை, பைக்கில் சுற்றும் ரோமியோக்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்,'' என்று மறைமுகமாக பா.ஜ.க.வை சாடியுள்ளார். அரசியல் ரீதியாக, பா.ஜ.க.வை வீழ்த்தும் ஆயுதமாகவே, மம்தா மொழிப் பிரச்னையை கிளப்பி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து