முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெறிமுறைகளை மீறும் வகையில் நடந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.

பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் இம்ரான்கான் பங்கேற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. புரோட்டாகால் எனப்படும் நெறிமுறைகளை மீறும் வகையில் இம்ரான்கான் நடந்துகொண்டதும் அதில் பதிவாகியுள்ளது. உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த அரசுத் தலைவர்கள் நின்றபடி, அடுத்தடுத்து வரும் அரசுத் தலைவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.

ஆனால் இந்த நெறிமுறைக்கு மாறாக, இம்ரான்கான் நேராக சென்று தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து அதை உணர்ந்தவராக எழுந்து நிற்கும் இம்ரான்கான் மீண்டும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டார்.

அண்மையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சவூதி அரேபியா சென்றபோதும் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறியதாக கண்டனம் எழுந்தது. சவூதி மன்னரிடம் பேசிய இம்ரான்கான், மன்னரை பார்த்து பேசாமல், அவரது மொழிபெயர்ப்பாளரிடம் பேசினார். மேலும் தான் கூறியதை மொழிபெயர்ப்பாளர் மன்னரிடம் எடுத்துரைப்பதற்கு முன்னரே இம்ரான்கான் விடுவிடுவென்று நடந்துசென்றுவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து