முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய எம்.பி.க்களுடன் உத்தவ் தாக்கரே இன்று அயோத்தி பயணம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுடன் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே இன்று  அயோத்தி செல்கிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது. 

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 2-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் அபார வெற்றி பெற்றது. பா.ஜ.க மட்டும் 303 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியான சிவசேனா 18 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சியின் 18 எம்.பி.க்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று அயோத்திக்கு செல்கிறார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பந்தலில் வைத்துள்ள ராமர் சிலையை வழிபட உள்ளார் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து