பீகாரில் வாட்டி வதைக்கும் வெயில்- அரசுப் பள்ளிகளுக்கு ஜூன் 22 வரை விடுமுறை

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      இந்தியா
bihar school holiday 2019 06 17

 பாட்னா : பீகாரில் வெயிலின் தாக்கம் குறையாததால், மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 22ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.  

பீகார் மாநிலத்தில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் நடமாடமுடியவில்லை. சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 200ஐ நெருங்குகிறது. வெயில் காரணமாக பள்ளி கோடை விடுமுறை முடிந்து, வகுப்புகளை தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.
பாட்னாவில் வெயில் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜூன் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூன் 19-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறையாததால், பீகார் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 22ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் கட்டுமான பணிகளை வெயில் நேரங்களில் மேற்கொள்ளக்கூடாது என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் பகல் நேரத்தில் திறந்தவெளியில் பொதுநிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து