இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - கட்டிடங்கள் குலுங்கின

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      உலகம்
earthquake 2019 06 17

 ஜகார்த்தா  : இந்தோனேசியாவில் நேற்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் குலுங்கின.  

பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. டிமோர் தீவில் உள்ள குபா ங் நகரில் இருந்து வடமேற்கில் 133 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து