முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்கத்திற்கு 6 மாதத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நிறைவடையும் நடிகர் விஷால் பேட்டி

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- பாண்டவர் அணி வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்திற்கு 6 மாதத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நிறைவடையும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் நாடக நடிகர்களை சந்தித்து நடிகர் விஷால், நாசர், கோவை சரளா உள்ளிட்டோர் ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். அதன்பின் நடிகர் விஷால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது. நடிகர் சங்க தேர்தல் வருகிற 23ம் தேதி சத்யா ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. இதற்காக திண்டுக்கல், நாமக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறோம். இதுபோன்ற தருணங்களில் நாடக நடிகர்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட போது என்னென்ன வாக்குறுதிகள் அளித்தோமோ அவை அனைத்தையும் நிறைவேற்றி சொல்லாத பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி மட்டுமே நிலுவையில் உள்ளது. பாண்டவர் அணி வெற்றி பெற்றால் அதையும் 6 மாதத்தில் கட்டி முடிப்போம். 30 ஆண்டுகளில் செய்ய முடியாததை கடந்த 3 ஆண்டுகளில் செய்து முடித்ததை சாதனையாக கருகிறோம்.
தேர்தலில் அரசியல் கலந்திருப்பதாக எதிர் அணியினர் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் என்றாலே அரசியல் தான். ஆனால் நடிகர் சங்க தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும். எங்கள் மீது குறை கூறுபவர்களும் எங்கள் நண்பர்கள் தான். தற்போது தேர்தலுக்காக வெவ்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து