முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருந்தன்மையை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வடமாநில ஜோடிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு:

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- பெருந்தன்மையை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 4ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வடமாநில ஜோடிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
பெருந்தன்மைக்கு பெயர்பெற்ற இந்திய திருநாட்டில் பெருந்தன்மையுடன் இருங்கள் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வடமாநில ஜோடியின் சாதனை முயற்சி குறித்த விபரம் இதோ: சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் தெஹ்சீன்(26),டெல்லியைச் சேர்ந்த பங்கஜ்(28) ஆகிய இருவரும் சாகச சைக்கிள் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிக் கொண்டு வடமாநிலங்கள் முழுவதையும் சைக்கிளால் சுற்றி வந்த இந்த ஜோடி தற்போது “ பி ஜெனரஸ் “ என்ற தலைப்பில் பெருந்தன்மையை வலியுறுத்தி தெற்கு கடைகோடியான கன்னியாகுமரி முதல் வடக்கு எல்லையான காஷ்மீர் மாநிலம் வரை 4ஆயிரம் கி.மீ தூரத்தை 40 நாட்களில் கடந்து புதிய சாதனை படைத்திட திட்டமிட்டனர்.அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தங்களது சாதனை சைக்கிள் பயணத்தை பங்கஜ்-தெஹ்சீன் ஜோடி துவக்கியது.நேற்றைய தினம் நெல்லை மார்க்கத்தில் வந்த இந்த ஜோடி விருதுநகர்,கள்ளிக்குடி தாண்டி சிவரக்கோட்டை வந்த போது அப்பகுதி மக்கள் சாதனை சைக்கிள் ஜோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.
திருமங்கலம் பகுதியில் காற்றின் வேகம் சற்றே அதிகமாக இருப்பதால் சைக்கிளை அழுத்துவதற்கு இந்த ஜோடி மிகவும் சிரமப்பட வேண்டிதாயிற்று.தற்போது இந்த ஜோடியுடன் பாதுகாப்பிற்காக தெஹ்சீனின் தாயார் எஸ்.பானு மற்றும் கார் டிரைவர் ராஜேந்திரா ஆகியோர் உடன் செல்கின்றனர்.இந்த சாதனை சைக்கிள் பயணம் குறித்து இளம்பெண் தெஹ்சீன் கூறுகையில்: இந்தியர்கள் எப்போதுமே பெருந்தன்மையுடையவர்கள் என்பதை மெய்ப்பித்திடும் வகையில் பெருந்தன்மையை வலியுறுத்தி கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை 4ஆயிரம் கி.மீ தூரத்தை 40 நாட்களில் கடந்திட திட்டமிட்டுள்ளோம்.தற்போது மதுரையை நோக்கி வந்துள்ளோம்.தமிழக மக்கள் மிகவும் அன்பானவர்கள்,பெருந்தன்மையுடையவர்கள். ஹோட்டலில் நாங்கள் சாப்பிட்ட போது எவ்வாறு உணவு பரிமாறுவது,எவ்வாறு இலையை எவ்வாறு எடுப்பது,சாப்பிடும் போது எப்படி நடந்து கொள்ளுவது என்றெல்லாம் எங்களுக்கு பயிற்சியளித்;தார்கள்.இந்த சைக்கிள் பயணத்தின் மூலம் நாங்கள் இந்தியர்களின் பெருந்தன்மையை உலகிற்கு எடுத்துக்கூற இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து