23 வருட சாதனையை முறியடித்த ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      விளையாட்டு
Rohit sharma-KL Rahul couple record 2019 06 17

உலகக்கோப்பை போட்டியில் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 100 சதவீதம் வெற்றியை தொடர்கிறது.

இந்த போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 113 பந்தில் 140 ரன்னும் (14 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 65 பந்தில் 77 ரன்னும் (7 பவுண்டரி), லோகேஷ் ராகுல் 78 பந்தில் 57 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா - ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது. இதற்கு முன்பாக 1996-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின்- சித்து ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 23 வருடங்களுக்கு பிறகு ரோகித், ராகுல் ஜோடி முறியடித்துள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 287 ரன்கள் எடுத்திருந்தது. இதில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. மான்செஸ்டர் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 336 ரன் குவித்து 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து