இந்திய அணிக்கு அமித்ஷா பாராட்டு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      விளையாட்டு
amit shah 2019 06 09

உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. இதில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, பாகிஸ்தான் மீது இந்திய அணி மற்றொரு தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறியுள்ளார்.

அற்புதமாக செயல்பட்ட ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் வாழ்த்துகள் என்றும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவதாகவும், கொண்டாடுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து