முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசிய அக்தர்!

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லாகூர் : மூளை இல்லாத கேப்டன்சியின் காரணமாகவே பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது என்று அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிட்னஸ் இல்லாத...

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதிய போட்டி நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி பற்றி கருத்துக் கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயிப் அக்தர் பாகிஸ்தான் அணியை சரமாரியாக விளாசித் தள்ளியுள்ளார். ஏற்கனவே, இந்த உலக கோப்பையில் பிட்னஸ் இல்லாத ஒரே கேப்டன் சர்ஃபிராஸ் அகமதுதான் என்று கூறியிருந்த சோயிப் அக்தர், இப்போது ஒரு படி மேலே சென்றிருக்கிறார்.

வெல்ல வாய்ப்பு

அவர் கூறும்போது, ‘’இந்த போட்டியில் டாஸ் வென்றது முக்கியமான விஷயம். அது  அதை வென்றதும் பந்துவீச்சை தேர்வு செய்தது, மூளையில்லாத கேப்டன்சியைதான் காட்டியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 260-280 ரன்கள் எடுத்திருந்தாலும் சேஸிங் செய்யும் போது அது இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கும். பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா செய்த அனைத்து தவறுகளையும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் செய்துள்ளது.

சரியில்லை...

பந்துவீச்சும் சரியில்லை. ஹசன் அலி சரியாக வீசவில்லை. வாஹா எல்லையில் போய் சல்யூட் அடிக்கத் தெரிகிறது, (கடந்த 2018 ஆம் ஆண்டு வாஹா எல்லையில், இந்திய பாதுகாப்பு வீரர்களை அவமதிக்கும் வகையில் ஹசன் அலி நடந்துகொண்டார். இது சர்ச்சையானது) இங்கு திறமையை காண்பிக்க வேண்டியதுதானே? முகமது ஆமீர் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுக்கத்தவறிவிட்டார். மூத்த வீரர்கள் இந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை’’ என்று அனைத்து வீரர்களையும் விமர்சித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து