விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மகராஷ்டிர சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
Maharashtra Assembly Mla 2019 06 18

மகராஷ்டிராவில் விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சட்டமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மகராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தொடரில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், விவசாயக் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக நேற்றும் சட்டமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் பிருத்விராஜ் சவான், பாலசாகேப் தோரட், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து