முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்குகளுக்கு பயந்து நாட்டு விட்டு ஓடவில்லை: சிகிச்சைக்காகவே வந்துள்ளேன் என்கிறார் மெஹூல் சோக்சி

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

நான் இந்தியாவைவிட்டு தப்பி ஓடவில்லை. மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகவே மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவா சென்றுள்ளேன். வேண்டுமானால், இங்கு என்னிடம் விசாரணை நடத்தலாம் என்று வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வைர வியாபாரி மெஹுல் சோக்சி தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வந்த வைர வியாபாரிகளான, நிரவ் மோடி மற்றும் அவருடைய உறவினரான மெஹுல் சோக்சி, 13,600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் கூறியது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன.

இந்த நிலையில் நிரவ் மோடியின் உறவினரான, மெஹுல் சோக்சி, மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஆன்டிகுவாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். மகராஷ்டிர மாநிலம் மும்பை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கில், சோக்சி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- நான் வழக்குகளுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடவில்லை. சில குறிப்பிட்ட நோய்களால் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்கு சிகிச்சை பெறுவதற்காக தான் இங்கு வந்துள்ளேன். சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியவுடன் நாடு திரும்புவேன். இந்த வழக்குகள் தொடர்பாக என்னிடம் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று நினைத்தால் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை இங்கு வரலாம். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து