முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சியானது ஆவடி: தமிழக அரசாணை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

ஆவடி நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

 
ஆவடி நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடி அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 148 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக இந்த ஆவடி புதிய மாநகராட்சி அமைய உள்ளதாகவும், மக்கள் தொகை 6.12 லட்சமாகவும், 80 முதல் 100 வார்டுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும். பொதுவாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை போன்றவைகளின் கட்டமைப்புகள் தரம் உயரும். அதே போல் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து