முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தத்தில் அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு

புதன்கிழமை, 19 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம்,   திண்டுக்கல் மாவட்டம், நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக திண்டுக்கல் கல்வி மாவட்டத்திலேயே முதன் முதலாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் இந்த கல்வி ஆண்டு முதல் எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி மற்றும் தமிழ்வழிக்கல்வியும் தொடங்கப்பட்டது. இதற்கான மாணவ,மாணவிகள் சேர்க்கை புதிதாக தொடங்கி சேர்க்கப்பட்டது. இதில் 352மாணவ,மாணவிகள் சேர்க்கப்பட்டனர். இதற்காக தற்காலிகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி வருகிறது. இதற்கு அடிப்படையான வகுப்பறையில் வரைபடங்களுடன், மின்விசிறி மற்றும் மின்விளக்குகள் பொருத்தி நவீன முறையில் மாணவர்கள் அமரும் இருக்கைகளுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டு குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் நத்தம் வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான தொடக்க விழா நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ., மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன்,வர்த்தகர் சங்க தலைவர் சேக்ஒலி, சட்ட ஆலோசகர் சேக்சிக்கந்தர் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார்..முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது. தமிழகத்தில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளது.இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முதலாக இந்த பள்ளி மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இந்த தொடங்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் ஏற்கனவே ஆறாம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருந்து வந்தது. இப்போது எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழியிலான கல்வி தொடங்கப்பட்டு அதற்கான கட்டமைப்பு வசதிகள்செய்யப்பட்டது. இதில் நத்தம் வர்த்தகர்கள் சங்கம் முன்வந்து 7 வகுப்பறைகளை தயார் செய்து கொடுத்துள்ளனர்.இப் பகுதி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இங்கு வந்து சேர்த்துள்ளனர். இதில் 352மாணவ,மாணவிகள் தற்போதைய நிலையில் படித்து வருகின்றனர். பள்ளி தொடங்கிய முதல் வருடத்திலேயே அதிக குழந்தைகள் சேர்ந்துள்ளனர். வருங்காலங்களில் இந்த பள்ளி தமிழகத்திலேயே முதன்மை பள்ளியாக வருவதற்கு இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் கடமை உணர்வோடு பணிபுரிந்து அனைத்து ஒத்துழைப்பும் தர வேண்டும். தமிழக அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் இந்த பள்ளிக்கு முன்னுரிமை கொடுத்துபெற்றுத் தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம், வர்த்தகர் சங்க செயலாளர் குத்புதீன், பொருளாளர் முருகேசன்,இந்து வர்த்தகர்கள் பொதுநல சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டமாணவ,மாணவிகள், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மேலாண்மை குழுவினர் என பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.முன்னதாக அனைத்து வகுப்பறைகளையும் மாணவ&மாணவிகளையும் சந்தித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து