முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் கடலில் புதிய சாலை பாலம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு.

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- பாம்பன் கடலில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையிலும், போக்குவரத்தை சீரமைக்கும் வகையிலும்,எதிர்கால திட்டத்தின் கீழ் மற்றொரு புதிய சாலைப்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் துறைமுக அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினார்கள்.
பாம்பன் கடலில் 2.8 கி.மீ தொலை தூரத்தில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சாலைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து தற்போது நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் விரிவாக்கம் செய்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் நான்கு வழிச்சாலை,எட்டு வழிச்சாலை ஆகிய வற்றை பல கோடி மதிப்பில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பேரில் மதுரை முதல் ராமேசுவரம் வரை மத்திய,மாநில அரசுகள் பல கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலைகள் அமைக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி பகுதியிலிருந்து மதுரை வரை நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இரண்டாம் கட்டமாக சத்திரக்குடி முதல் ராமேசுவரம் தனுஸ்கோடி வரை நான்கு வழிச்சாலைகள் அமைக்கும்  பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அதன் பேரில் மண்டபம் பகுதியையும்,ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2.8 கி,மீ தொலை தூரத்தில் நான்கு வழிச்சாலை அமைக்க அதிகாரிகள் நேற்று பாம்பன் கடலில் ஆய்வு நடத்தினார்கள்.இந்த ஆய்விற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையர் மற்றும் திட்ட இயக்குநர் பாஸ்கரன்  மற்றும்  தமிழக துறைமுக அலுவலக அதிகாரி அன்பரசன் ஆகியோர்கள் தலைமையில் பொறியாளர்கள் பாம்பன் துறைமுக அலுவலகத்திற்கு நேற்று  வந்தனர்.இவர்கள் அப்பகுதியிலிருந்து நாட்டு படகில் அதிகாரிகளுடன் சென்று கடலில் ஆய்வு நடத்தினார்கள்.அங்கு பழைய சாலைப்பாலம் அமைந்துள்ள தூண்களையும்,கப்பல் கடந்து செல்லும் அளவிற்கு அமைக்கப்ப்ட்டுள்ள உயரமான பாலத்தையும் பார்வையிட்டனர்.பின்னர் புதிய  சாலைப்பாலம் அமைக்கும் வழியையும்,கப்பல் கடந்து செல்லும் அளவிற்கு கடலில் ஆழம் குறித்தும் பார்வையிட்டனர்.அப்போது செய்தியாளர்களிடம் போக்குவரத்தை சீரமைக்கவும், எதிர்கால திட்டத்தின்படியும் பாம்பன் கடலில் புதிய சாலைப்பாலம் அமைக்க ஆய்வு நடத்தியதாகவும்,தற்போது உள்ள சாலைப்பாலத்துடன் உயரமாக அமைக்கவும்,பைபாஸ் சாலை பாலம் அமைக்கவும் மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவுத்தனர்.இந்த ஆய்வில் ராமேசுவரம் துறைமுக அலுவலர் மானக்ஸா உள்பட பல்வேறு பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து