முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்:

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருமங்கலம் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுத் தொண்டு திட்டத்தின் சார்பாக மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு யோகா செய்முறை பயிற்சியளிக்கப்பட்டது.
இந்தியா மட்டுமின்ற பல்வேறு உலக நாடுகளிலும் சர்வதேச யோகா தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று காலை 10.30மணியளவில் சிறப்பு யோகா செய்முறை பயிற்சியளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் ஆர்.விஜயராஜன், கல்லூரிச் செயலாளர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி,கல்லூரிப் பொருளாளர் பி.டி.என்.ஏ.அசோக்குமார் ஆகியோர் தலைமைதாங்கி சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் சுகாதார ஆய்வாளர் டி.பழனி கலந்துகொண்டு மாணவ, மாணவியர்களுக்கு யோகா செய்முறை பயிற்சியளித்து சிறப்புரையாற்றினார்.இந்த பயிற்சியில் நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர்.கணேசன் மற்றும் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் கல்லூரி நாட்டுத் தொண்டு திட்ட அலுவலர் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து