முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்த போட்டி‌களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை வீரர் மலிங்கா சாதனை

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லீட்ஸ் : இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு அதிகமாக ரன்களை கொடுக்காமல் அழுத்தத்தை கொடுத்ததால் வெற்றி பெற்றோம் என்று இலங்கை பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தெரிவித்தார். மேலும், குறைந்த போட்டி‌களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

அதிரடியாக...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த போட்டியில் இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 3 ரன்களுக்குள் கேப்டன் கருணாரத்னே, குஷால் பெரேரா விக்கெட்டுகளை இழந்தது. சவாலான சூழலில் களமிறங்கிய அவிஷ்கா பெர்ணான்டோ அதிரடியாக விளையாடி 49 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் அனுபவ வீரர் மேத்யூஸ் நிதானமாக விளையாடி 85 ரன்களை சேர்த்தார். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

212 ரன்களுக்கு...

233 வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மலிங்கா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். மலிங்காவின் பந்தை சமாளிக்க திணறிய இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்ட மிழந்தனர். ஜோ ரூட் 57 ரன்கள் எடுத்த நிலையில், ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை போராடினார். எனினும், மறுமுனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால், இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 20 ரன்களில் தோல்வியடைந்தது.

மலிங்கா சாதனை..

பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 82 ரன்கள் சேர்த்தார். மலிங்கா 4 விக்கெட் வீழ்த்தினார். அவர் 3 விக்கெட் வீழ்த்திய போது, உ‌லகக்கோ‌ப்‌பை வரலாற்றில், குறைந்த போட்டி‌களில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை மலிங்கா படைத்தார்.

சாதகமாகிவிட்டது...

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட அவர் கூறும்போது, ‘’இங்கிலாந்து பலம் வாய்ந்த அணி என்பது தெரியும். அதுவும் கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் எப்படி ஆடுவார் என்பதும் தெரியும். ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகளில் அவரது ஆட்டத்தைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம். சரியான ஏரியாவில் பந்தை வீசினோம். அவருக்கு அதிகமாக ரன்களை கொடுக்காமல் அழுத்ததை ஏற்படுத்தினோம். இறுதியில் போட்டி எங்களுக்கு சாதகமாகிவிட்டது. எங்கள் திட்டத்தை நாங்கள் சரியாக செயல்படுத்தினோம். பந்துகளை பல்வேறு விதமாக வீசி, விக்கெட்டுகளை வீழ்த்தினோம். எங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை அதிகரித்திருக்கிறது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து