முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கை இல்லாமல் இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேர்வாகிய தேனி இளைஞர் ஜோர்டன் நாட்டில் நடக்கும் போட்டிக்கு செல்ல பணம் இல்லாமல் பரிதவிப்பு

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்டம், கோட்டூரை சேர்ந்தவர் ராணி. இவருக்கு இரண்டு குழந்தைகள். இவருடைய கணவர் இவரை விட்டு பிரிந்து போய்விட்டார். இருந்தபோதிலும் ஒரு சிறிய தகர வீட்டில் குடியிருக்கும் இவர் கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார். அதில் ஒருவர்  பாலமுருகன் (26) இவர் பிறவியிலேயே இடது கை இல்லாமல் பிறந்தவர். இவர் கால்பந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவருடைய ஆர்வத்தை கண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவரை கால்பந்தாட்டம் விளையாட உற்சாகப்படுத்தியதால் ஊனமுற்றோர் கால்பந்தாட்ட  பிரிவில் சேர்ந்து மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய அபார திறமையால் அணிக்கு தலைமையேற்ற இவர் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான  7 பேர் பங்கேற்கும் மினி கால்பந்தாட்ட போட்டியில்  இரண்டாவது பரிசை பெற்று தந்தார். அதனை தொடர்ந்து நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இப்போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. வரும் அக்டோபர் மாதம் ஜோர்டான் நாட்டில் நடைபெறும் மினி கால்பந்தாட்ட போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார். இவருடைய தாய் ராணி கூலி வேலை செய்தும், கடன் வாங்கியுமே  பாலமுருகனின் படிப்பு மற்றும் விளையாட்டிற்காக இதுவரை செலவழித்துள்ளார். தற்போது ஜோர்டான் நாட்டிற்கு சென்று இந்திய அணிக்காக விளையாட போதிய பணம் இல்லாததால பாலமுருகன் பரிதவித்து வருகிறார். இதனால் போட்டியில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அரசு தனக்கு தேவையான உதவியை செய்தால் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து