தண்ணீர் பிரச்சினையை சரி செய்ய தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது: மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேச்சு

புதன்கிழமை, 26 ஜூன் 2019      இந்தியா
ravindranath kumar 2019 06 18

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய அ.தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என மக்களவையில் ரவீந்திரநாத் குமார் பேசினார்.

மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசும் போது கூறியதாவது;-

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க, பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அரசின் திட்ட பட்டியல்களை தி.மு.க.வுக்கு வழங்கவும் தயார். தமிழக அரசின் பிரதிநிதியாக நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன். எனக்கு எதிராக இருக்கும் 37 பேர் பொய் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து