லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது தேன்மொழி எம்.எல்.ஏ

புதன்கிழமை, 26 ஜூன் 2019      திண்டுக்கல்
26  The laptop delivery

வத்தலக்குண்டு- தமிழகத்தில் கிராம மாணவ, மாணவிகள் மேல்படிப்பு தொடர வேண்டும் ஒரே நோக்கத்துடன் அம்மா அவர்கள் கொண்டு வந்த லேப்டாப் வழங்கும் திட்டம் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் லேப்டாப் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் சேவுகம்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. வத்தலக்குண்டு ஒன்றிய கழக செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். சேவுகம்பட்டி பேரூர் செயலாளர் மாசாணம், பட்டிவீரன்பட்டி பேரூர் செயலாளர் ராஜசேகரன், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டிச்சாமி அனைவரையும் வரவேற்றார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இப்பள்ளியில் 12ம் வகுப்பும் படிக்கும் 21 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் விலையில்லா கணினிகளை வழங்கி தனது சிறப்புரையில் தமிழகத்தில் கிராம மாணவ, மாணவிகள் மேல்படிப்பு தொடர வேண்டும் ஒரே நோக்கத்துடன் அம்மா அவர்கள் கொண்டு வந்த இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட கழக செயலாளர் மருதராஜ் ஆகியோர் ஆசியுடன் இன்று 21 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளி நடப்பாண்டில் அரசு நடத்தும் 10ம் வகுப்பு, 11 ம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு ஆகிய அரசு தேர்வுகளில் 100க்கு 100 சதவீதம் சாதனை படைத்துள்ளார்கள். இதனை கற்றுத் தந்த ஆசிரியர் பெருமக்களையும், 100க்கு 100 சதவீதம் சாதனை படைத்துள்ள மாணவ, மாணவிகளையும் மனதார பாராட்டுகிறேன் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் சேவுகம்பட்டி பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சதீஷ்குமார், ராமமூர்த்தி, முருகேசன், அருண்குமார், மரியஜெயப்பிரகாசம், ரமேஷ், எம்.ஜி.ஆர் என்ற பாலசேகரன், உள்பட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள். முடிவில் ஆசிரியர் தெய்வராஜ் நன்றி கூறினார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து