முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவிட்சர்லாந்தில் 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் ரூ. 34 கோடிக்கு ஏலம் போனது

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

பெர்ன் : சுவிட்சர்லாந்து நாட்டில் கொல்லெர் என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விட்டது.

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற போது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல கிண்ணத்தை வாங்கி வந்தனர். அதன் பின்னரே அது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே அதனை நல்ல விலைக்கு விற்க முடிவு செய்தனர். இதற்காக ஏலம் விடும் நிறுவனங்களை அவர்கள் அணுகிய போது, எந்த ஏல நிறுவனமும் அதனை விற்க முன்வரவில்லை. இதனால் அந்த கிண்ணத்தை விற்கும் முயற்சியை கைவிட்ட அவர்கள், அதனை வீட்டில் டென்னிஸ் பந்துகளை போட்டு வைக்க பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் அந்த தம்பதியின் வீட்டுக்கு சென்ற பிரபல ஓவியர் ஒருவர், அந்த வெண்கல கிண்ணத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அந்த கிண்ணம் 300 ஆண்டுகளுக்கு முன் சீன அரசர் ஒருவருக்காக உருவாக்கப்பட்டது என அவர் கூறினார். இது பற்றி கேள்விப்பட்ட கொல்லெர் என்ற ஏல நிறுவனம் அந்த தம்பதியிடம் இருந்து வெண்கல கிண்ணத்தை வாங்கியது. பின்னர், அதனை உடனடியாக ஹாங்காங் எடுத்துச் சென்று அங்கு ஏலம் விட்டது. இதில் அந்த கிண்ணம் 4.8 மில்லியன் சுவிஸ் பிராங்க் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரம்) ஏலம் போனது. இந்த தகவலை கொல்லெர் ஏல நிறுவனம் படத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து