முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பொருட்கள் மீதான வரியை இந்திய திரும்ப பெற டிரம்ப் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 27 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட அதிக வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் இன்று மற்றும் நாளை ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர்  டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.

பிரதமர் மோடியை சந்திக்க இருக்கும் நிலையில், அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

பிரதமர் மோடியை சந்திப்பதை எதிர் நோக்கியுள்ளேன். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக வரிகளை விதித்துள்ளது. அண்மையில் மீண்டும் அதிக வரி விதிக்கப்பட்டது. இது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதிக வரி விதிப்பை கண்டிப்பாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து