முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுறாவினால் தாக்கப்பட்டு இறந்தவர்களை விட உலகில் செல்பி மோகத்தால் இறந்தவர்கள் 5 மடங்கு அதிகம்: ஆய்வில் புதிய தகவல்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

உலகம் முழுவதும் சுறா தாக்குதலால் இறந்தவர்களை விட செல்பியால் இறந்தவர்களே 5 மடங்கு அதிகமாக உள்ளனர் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் ஒரு விஷயத்திற்கு அடிமையாகி உள்ளனர் என்றால் அது செல்பிதான். இது ஆபத்தானதாக இருந்தால்கூட விரும்பி செய்கின்றனர்.  இதனால் பல உயிர்கள் பறி போய் உள்ளன. இது குறித்த ஆய்வு ஒன்றில், கடந்த 2011 முதல் 2017 ஆண்டு வரையிலான காலத்தில் 259 பேர் செல்பியினால் இறந்துள்ளதாக என தெரிய வந்துள்ளது. அதே சமயம் இதே கால கட்டத்தில் சுறா தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 50 மட்டுமே ஆகும். இந்தியாவில்தான் அதிகம் உயிரிழந்துள்ளனர். சுறாவினால் தாக்கப்பட்டு இறந்தவர்களைவிட 5 மடங்கு மக்கள் செல்பி மோகத்தால் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். மேலும் பெண்கள், இளைஞர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.  இந்தியாவில் செல்பி எடுக்கும் போது விபத்தில் சிக்கி மட்டுமே 159 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் மிக உயரமான கட்டிடங்களில் இருந்து செல்பி எடுத்து பலர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து