ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் கிரிக்கெட் உலககோப்பை வடிவிலான கேக்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      ராமநாதபுரம்
28 cricket cake

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் உள்ள ஐஸ்வர்யா பேக்கரியில் உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெறுவதையொட்டி உலககோப்பை வடிவிலான கேக் வைக்கப்பட்டுள்ளது.
     ராமநாதபுரத்தில் புகழ்வாய்ந்த ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனத்தினர் நடைபெற்று வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைச்செய்யவும், இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்றவும் புதிய உலக கோப்பை வடிவிலான கேக்கினை தயார் செய்துள்ளனர். ராமநாதபுரம் பாரதிநகர் ஐஸ்வர்யா பேக்கரி நிறுவனத்தில் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சர்க்கரை மற்றும் முட்டையால் செய்யப்பட்ட 2019 உலகக்கோப்பை கேக் கடையின் வாயிலில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கினை 60 கிலோ சர்க்கரை மற்றும் 300 மூட்டை கொண்டு தலைசிறந்த கேக் வடிவமைப்பாளர்கள் 6 பேர் கூட்டாக சேர்ந்து சுமார் நான்கு நாட்கள் நுணுக்கமாக வேலை செய்து இதனை தயார் செய்துள்ளனர்.
   உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை இது வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. கடையின் வாயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த உலககோப்பை கேக்கினை ஏராளமானோர் திரளாக வந்து பார்வையிட்டு செல்வதுடன் அதன்முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். தத்ரூபமாக இந்த கேக்கினை வடிவமைத்த வல்லுனர்களை ஐஸ்வர்யா பேக்கரி உரிமையாளர் வெங்கடசுப்பு பாராட்டி வாழ்த்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து