குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் பெரியகுளம் ஒன்றிய ஊராட்சிகளில் நிறைவேற்றம்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      தேனி
28 gramashaba

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் நேற்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல்,  சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தினை பாதுகாத்திட திறந்த வெளியில் மலம் கழிக்காமல் கழிப்பறைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் நிறைவேற்றப்பட்டது.
கீழவடகரை ஊராட்சி : கீழவடகரை ஊராட்சியில் செயலர் ஜெயபாண்டி தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய உதவியாளர் கோமதி மேற்பார்வையிட்டார். 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வடபுதுப்பட்டி ஊராட்சி : வடபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் கணபதி தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தர் பாலமுருகன் மேற்பார்வையிட்டார். 210க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
டி.வாடிப்பட்டி ஊராட்சி : டி.வாடிப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் பாலகிருஷ்ணன் தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய கணக்கர் மாரிமுத்து மேற்பார்வையிட்டார். 117 பேர் கலந்து கொண்டனர்.
சில்வார்பட்டி ஊராட்சி: சில்வார்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் செயலர் பிச்சைமணி தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய பொறியாளர் உமா மேற்பார்வையிட்டார். 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சி : பொம்மிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் செயலர் சாகுல்ஹமீது தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் நாகராஜன் மேற்பார்வையிட்டார். இக்;கூட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேல்மங்கலம் ஊராட்சி : மேல்மங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி செயலர்; முருகன் தீர்மானங்களை வாசித்தார். ஊராட்சி ஒன்றிய உதவியாளர் தங்கம் மேற்பார்வையிட்டார். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜெயமங்கலம் ஊராட்சி : ஜெயமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா மேற்பார்வையிட்டார்.  ஊராட்சி செயலர் கோபாலகிருஷ்ணன் தீர்;மானங்களை வாசித்தார். அடிப்படை வசதி வேண்டியும் சிறுபாலங்கள் அமைக்கவும் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இவை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து