தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      மதுரை
28

மதுரை, - மதுரையில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிண்டிகேட் வங்கி, மதுரை மாவட்ட தொழில் மையம், மடீட்சியா சார்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் நாள் - 2019 முன்னிட்டு தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் மதுரை மடீட்சியா ஹாலில் நடந்தது.
துவக்க விழாவில் எம்.எஸ்.எம்.இ. மதுரை மையத்தை சேர்ந்த ஆர்.வி. சுப்ரமணியம் வரவேற்று பேசினார். மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் எம். ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். சென்னை எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குனர் என். சிவலிங்கம், மடீட்சியா தலைவர் கே.வி. முருகன், கனரா வங்கி துணை பொது மேலாளர் பி.டி. கலைசெல்வன், சிண்டிகேட் வங்கி மண்டல மேலாளர் பி. சவடமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். மடீட்சியா கவுரவ செயலாளர் பி.முருகானந்தம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து