முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டோனி' அவர் என்றுமே 'ஒரு லெஜண்ட்': கேப்டன் விராட் கோலி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிறப்பாக ஆடியதன் மூலம் தல டோனி, ஆப்கானுக்கு எதிரான போட்டியில் சரியாக ஆடவில்லை என்று எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடியதன் மூலம் அவர் அணிக்கு என்ன தேவை என்பதும், எப்படி ஆட வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும் என்று கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

டோனி 56 ரன்கள்...

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 34-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 72 ரன்களும் டோனி 56 ரன்களும் எடுத்தனர்.  பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய தரப்பில் முகமது ஷமி, 4 விக்கெட் வீழ்த்தினார். சேஹல், பும்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கு கிடைத்தது.

உதவியிருக்கிறது...

பின்னர் டோனியின் ஆட்டம் பற்றி  அவரிடம் கேட்டபோது, ‘’அணிக்கு என்ன தேவை என்பது டோனிக்கு தெரியும். அதன்படி தான் மிடில் ஓவரில் ஆடி வருகிறார். சில நேரங்களில் ஆடாமல் இருக்கலாம். அது எல்லோருக்கும் நடக்கிற ஒன்று. ஆனால் அவர் ஆடவில்லை என்றால் மட்டும் எல்லோரும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தப் போட்டியில் அவர் சரியாகவே செயல்பட்டார். கடைசி நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவரது அனுபவம், பத்துக்கு 8 முறை அணிக்கு சரியாகவே உதவியிருக்கிறது.

அவர் லெஜண்ட்...

சிறப்பாக கிரிக்கெட் ஆடும் வீரர்கள் பலர் அணியில் இருக்கிறார்கள். ஆனால், டோனி மட்டும்தான் இந்த பிட்ச்-சில் எந்த ஸ்கோர் சிறந்தது என்கிற தகவலை தருபவராக இருக்கிறார். இந்த பிட்ச்-சில் 265 நல்ல ஸ்கோர் என்று அவர் சொன்னால், நாங்கள் 300 ரன்னுக்கு முயற்சிக்கவும் மாட்டோம். 230-க்குள் முடிக்கவும் மாட்டோம். அவர் எங்களுக்கு லெஜண்ட் போன்றவர். அவருக்கு ஆதரவாகவே இருக்கிறோம். இந்தியாவுக்காக பல போட்டிகளில் அவர் வெற்றி தேடி தந்தவர்.

இரண்டு சிக்சர்கள்..

கடைசி இரண்டு போட்டிகளில் நாங்கள் நினைத்த மாதிரி நடக்கவில்லை. ஆனாலும் வெற்றி பெற்றோம். வெஸ்ட் இண்டீ ஸ்-க்கு எதிரான போட்டியில் ஸ்கோர் 250 ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். டோனி, 270-க்கு நெருக்கமாக கொண்டு வந்தார். கடைசி ஓவரில் அவர் அடித்த இரண்டு சிக்சர்கள் முக்கியமானது. பாண்ட்யாவும் சிறப்பாக விளையாடினார்’’ என்றார்.

விமர்சனங்களுக்கு...

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் டோனியின் ஆட்ட வேகம் மந்தமாக இருந்ததாக விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டன. மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் அதற்கு விதிவிலக்கல்ல. அவரும் டோனியை சற்றே சாடியிருந்தார். ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் அவர் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது, அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அவர் மீது விமர்சனங்கள் எழுவதும், பின் டோனி அவருக்கே உரிய பாணியில் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து வந்தாலும், அவரின் இந்த அணுகுமுறையே உலக கோப்பை போட்டி வரை அவரை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து